Random Template

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

Monday, 15 July 2013 | 0 comments

திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.

prabhakaran childhood photo
வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.

பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள ‘சிதம்பரா கல்லூரியில்” 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.

ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். “உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Tags: ware history of Tamil Eelam,velupillai prabhakaran,prabhakaran,ltte,ltte history,velupillai prabhakaran history,history of prabhakaran,ltte leader prabhakaran,ltte leader ,ltte leader prabhakaran history,tamil eelam,ltte leader prabhakaran childhood,prabhakaran childhood photos


Family Background Of Prabhakaran, Leader Of The LTTE

Valvettithurai was one of the important Northern ports during the period of the Jaffna and even before. It served as a bridge between northern of the Sri Lanka and the port of Kodikkarai in Thamil Nadu. The people of Valvettithurai are brave sailors who traveled the stormy seas and amassed great wealth through trade. This sea-port has earned an indelible fame in the annals of Sri Lanka. This is because it is the birthplace of Prabhakaran, Co- founder of the Liberation Tigers of Thamil Liberation (LTTE), who is leading the Thamil Eelam , separate sate for Tamils. He was born in this historic village on 26th, November 1954.

“Thirumeniyar family” is one of the reputed families in Valvettithurai. Thirumeniyar is one of 4 sons born to Iyampillai Velayuthar. His brothers are Gnanamoorthiyar, Puniyamoorthiyar and Arumugathaar. Thirumeniyar’s maternal uncle Ponnambalam was a successful businessman and was conferred with the title of Mudali during the Dutch period. Thirumeniyar Venkadasalam alias Thirumeniyar Periyathambiyar erected the famous Vaitheeswaran Sivan temple of Valvai according to the wish of his father. The temple construction commenced in 1867 and was consecrated in 1883. He renovated two more temples viz Vaikunthap Pillayar and Puddanip Pilaiyar temples. He also built many Madams for the use of pilgrims at Mullaithivu. The family also built two more temples. Valvai Muthu Mariamman temple and Nediyakadu Pillaiyar temple. Another family called Methaiveedu Nagalingam lived in the adjoining town of Point Pedro. This family was also reputed for building many temples in this area. These two families were joined together through marriage. Thiruvenkadam Velupillai of Thirumeniyar family married Paarvathy of Nagalingam family.

Prabhakaran is the youngest child born in that family. Prabhakaran has one elder brother and two elder sisters. All of them are happily married and settled down in life. One of his sister Vinothini Rajendram is in Canada. The other sister are brother are living in Denmark.

Prabhakaran's father served under the government as a District Land Officer for several years. Prabhakaran’s father and mother are domiciled in Tiruchi, Thamil Nadu at present.

Prabhakaran had his education up to 10th grade at Sithamparam Vidyalayam in Oorikkadu, Valvettithurai.

In those days the sole ambition of children from affluent and middle class families was to receive good English education and then seek employment abroad or secure employment in the government. But from his childhood days Prabhakaran's way of thinking was completely different.

When he travelled with his father to the other parts of Sri Lankahe saw for himself how the Sinhalese policemen ill-treated innocent Tamil people by kicking and beating them. Such incidents caused shock and pain and left deep scars in his psyche.

Especially, the first major attack against the Tamils during 1958 affected his mind profoundly. Still in his teens, he heard numerous heart-aching stories of inhuman and brutal murders of Tamils by Sinhalese goon squads and thugs.

He heard at first hand from a widowed mother who is well known to his parents the anguish and pain she suffered. How Tamil children were killed by heartless mobs by throwing them into cauldrons of boiling tar. How a Hindu priest was burnt alive at a temple in Panadura. So when he came to know how the unfortunate Tamils have been at the receiving end of horrible attacks at the hands of Sinhalese goons, he developed deep sympathy, love and a firm resolve to defend the defenseless the Tamil people.

So he perfected an irresistible urge in his mind to free the Tamil people from the clutches of the oppressive Sinhalese government. He came to the firm and resolute conclusion that the only way to confront the racist Sinhalese government which used military might against the defenseless and innocent Tamil people is through armed struggle.

So during his student days, he and his friends learnt the art of making improvised hand grenades. On one such occasion a grenade exploded accidentally and he received burnt marks on his leg. After medical treatment the burnt area became black. This earned him the nickname 'Karikalan' (person with a blackened leg) when he was still a young lad.

The standardization system introduced by the government in 1971 acted as a stumbling block against Tamil students gaining entry to Universities after finishing high school. Prabhakaran who studied up to 10th grade could not continue his studies because of his involvement as a liberation fighter.

Prabhakaran parents were completely unaware of his clandestine activities. But the opportunity for the parents to know of his clandestine revolutionary activities came knocking at the door on its own.

One day a posse of policemen came in search of Prabhakaran. They knocked at the front door of his house at the unholy hour of 3 a.m. in the morning. Immediately on hearing the knocks, Prabhakaran immediately knew it is the Police had come in search of him. Sensing trouble, he vanished through the back door into the darkness of the night without anyone's knowledge.

Prabhakaran’s mother opened the door and was startled to see several policemen in khaki uniform standing in front of the house. She was shocked because at that time she was unaware of Prabhakaran’s involvement in any ‘clandestine movement’. Finally, after a thorough search of the house a disappointed Police went back empty handed failing to apprehend Prabhakaran. He was only 19 years old at that time and he never returned home thereafter.

When his father came to know of his involvement in revolutionary activities, he went to Prabhakaran’s hide- out and brought him back home.

Prabhakaran told his parents "I will never be of any use to you or to other members of the family. Let there be no trouble for you because of me. Please allow me to go my own way. In future never expect anything from me." So saying he left the house. Then he plunged himself fully in the clandestine activities of the movement. He became a full time activist living under ground and moving from place to place to escape arrest by the Police.

பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்

Saturday, 13 July 2013 | 0 comments

பலாலி விமானத்தளத் தாக்குதலின் நோக்கம்….







பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1

என்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும்.

பின்னணி : 1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர்.

அந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.
தாக்குதல் : இத்தாக்குதலுக்கென முப்பது வரையான வீரர்களைக் கொண்ட அணி கடல்வழியாக நகர்ந்தது.

கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அணி இரண்டாகப் பிரிந்து தளத்தினுள் ஊடுருவியது.

இலக்கை அடைய முன்பே எதிரியினால் இனங்காணப்பட்டு அவ்வணிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.

எதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறாமல்போக, தப்பியவர்கள் தளம் திரும்பினர். இத்திட்டம் புலிகளுக்கு முற்றுமுழுதான தோல்வியாக முடிவடைந்தது.

இத்தாக்குதலில் புயலாக வீசிய 13 தேசத்தின்புயல்கள் …
கரும்புலி கப்டன் ஐயனார்,கரும்புலி,BT,Black tiger Iyanar

கரும்புலி கப்டன் கரிகாலன்,கரும்புலி,BT,Black tiger Karikalan

கரும்புலி கப்டன் மதிநிலவன்,கரும்புலி,BT,Black tiger Mathiy Nilavan

கரும்புலி கப்டன் சீராளன்,கரும்புலி,BT,Black tiger siralan

கரும்புலி கப்டன் செந்தமிழ் நம்பி,கரும்புலி,BT,Black tiger Senthamilnampi

கரும்புலி கப்டன் சிவலோகன்,கரும்புலி,BT,Black tiger Sivalokan

கரும்புலி லெப்டினன் சிவரஞ்சன்,கரும்புலி,BT,Black tiger Sivaranjan

கரும்புலி லெப் கண்ணன்,கரும்புலி,BT,Black tiger Kannan

கரும்புலி லெப் நல்லதம்பி,கரும்புலி,BT,Black tiger Nalla thampi

கரும்புலி லெப் செங்கண்ணன்,கரும்புலி,BT,Black tiger Sengkannan

கரும்புலி லெப் வீரமணி,கரும்புலி,BT,Black tiger Viramani

கரும்புலி மேஜர் கலையழகன்,கரும்புலி,BT,Black tiger Kalaiyalakan

கரும்புலி மேஜர் தொண்டமான்,கரும்புலி,BT,Black tiger Thondamaan

பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் – 2

என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.

பின்னணி : 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.

இந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.

தாக்குதல் : கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

நகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.

ஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் விரசாவை தழுவினர்.. அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.

இத்தாக்குதலில் புயலாக வீசிய தேசத்தின்புயல்கள்…
கரும்புலி கப்டன் நவரெட்ணம்,கரும்புலி,BT,Black tiger Navaradnam

கரும்புலி கப்டன் திரு,கரும்புலி,BT,Black tiger Thiru

சிறப்பு வேவுப்படை வீரன் மேஜர் அசோக்,கரும்புலி,BT,Black tiger achok

கரும்புலி மேஜர் ஜெயம்,கரும்புலி,BT,Black tiger Jeyam

கரும்புலி மேஜர் திலகன்,கரும்புலி,BT,Black tiger Thilakan

கரும்புலி லெப் ரங்கன்,கரும்புலி,BT,Black tiger Rangan

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"






Tags:  பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்,LtteAttacks, HistoriesofTamilEelam, TamileelamEntries, களங்கள், eelamwoods,eelamwoods.blogspot.com,கரும்புலி கப்டன் ஐயனார்,கரும்புலி கப்டன் கரிகாலன்,கரும்புலி கப்டன் மதிநிலவன்,கரும்புலி கப்டன் சீராளன்,கரும்புலி கப்டன் செந்தமிழ் நம்பி,கரும்புலி கப்டன் சிவலோகன்,கரும்புலி லெப்டினன் சிவரஞ்சன்,கரும்புலி லெப் கண்ணன்,கரும்புலி லெப் நல்லதம்பி,கரும்புலி லெப் செங்கண்ணன்,கரும்புலி லெப் வீரமணி,கரும்புலி மேஜர் கலையழகன்,கரும்புலி மேஜர் தொண்டமான்,palaly airport sri lanka,palaly airport ,sri lanka,jaffna palaly,palaly,jaffna,tamileelam,tamileelam palaly,கரும்புலி மேஜர் ஜெயம்,கரும்புலி மேஜர் திலகன்,கரும்புலி கப்டன் திரு,கரும்புலி கப்டன் நவரெட்ணம்,கரும்புலி லெப் ரங்கன்,சிறப்பு வேவுப்படை வீரன் மேஜர் அசோக்

தமிழீழ வீரமுனைப் படுகொலை

| 0 comments

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனைஇ வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள்;. கட்டிய மனைவிமாரும்இ பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.

சம்மாநதுறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவி;ற்குத் தப்பியோடினார்கள். காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பறவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழி;த்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”.

பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவி;ட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப்பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இ.ராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ம் திகதி கொண்ட வெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை வீரமுனை கலைதிபுரம் புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.

ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவட்படையினரும் முஸ்லீம் ஊர்காவட்படையினரும எங்களாளும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த்தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சலைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள்.

புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும். என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான்.

அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையிiர் விட்டு வைக்கவில்லை 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடபட்டன. சொத்துக்கள் சுறையாடப்டன எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கிசுட்டுக்;கு இலக்காகினர். இருபத்தைந்துபேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவலைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவரு? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்மயுத்தத்திற்காய் களம்புகுந்தனர். களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப்போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்துகிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும் பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது.

Tags : Eelam Murders,Tamileelam Entries,Histories of TamilEelam,Eelamwoods,www.eelamwoods.blogspot.com,தமிழீழ வீரமுனைப் படுகொலை,வீரமுனைப் படுகொலை,தமிழர் படுகொலைகள்,தமிழீழ வரலாறு,தமிழீழ பதிவுகள்,விடுதலை புலிகள்,தமிழ் ஈழம்
 
Support : Creating Website | videowoods Template | woods Template
Copyright © 2011. Eelam Woods - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger